தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் பப்பாளியில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பது குறித்த இரண்டு நாள் பயிற்சி வரும் நவம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இப்பயிற்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இப்பயிற்சியில் பப்பாளிப் பழத்திலிருந்து பழரச பானம், தயார் நிலை பானம் மற்றும் கேண்டி தயாரிப்பது குறித்தும், தக்காளியில் இருந்து ஊறுகாய், சூப், சாஸ், ஜாம், கெட்சப், உலர்த்தப்பட்ட தக்காளி மற்றும் தக்காளி விழுது தயாரிப்பது குறித்தும் செய்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் ரூ.1,770 கட்டணமாக செலுத்த வேண்டும். பயிற்சிக் கட்டணத்தை பயிற்சியின் முதல் நாளான நவம்பர் 17ம் தேதி செலுத்த வேண்டும்.