கோவை, அஜ்ஜனூரில் உள்ள பாரதிய வித்யா பவன் பொதுப் பள்ளியில் தீபாவளித் திருவிழா கொண்டாடப்பட்டது.

விழாவில் மழலையர் வகுப்பு, நான்காம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. இரண்டாம் வகுப்பு மாணவர்கள் நரகாசுர வதத்தை மையமாகக் கொண்டு நாடகம் நடத்தி, தீமை அழிந்து நன்மை வெல்லும் தத்துவத்தை எடுத்துரைத்தனர்.

9a 1 scaled

நிகழ்ச்சியின் நிறைவாக, பள்ளி முதல்வர் வித்யாசங்கர் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.