சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியின் டீன் பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கண்காட்சியைத் தொடங்கிவைத்தார்.

அவர் பேசுகையில்: வாழ்க்கையில் மிகப்பெரிய உயரங்களை அடைய சில அடிப்படை விதிகளை நினைவில் கொள்ளுங்கள். மிகக் கடினமாக உழையுங்கள்.இலக்குகளை நோக்கித் தினமும் சோர்வின்றிச் செயல்படுங்கள். தோல்விகளைக் கண்டு ஒருபோதும் அஞ்சாதீர்கள். அவை உங்களைக் கற்பித்து உயர்த்தும் படிகள். இடைவிடாத கடுமையான உழைப்பு மட்டுமே உயர்த்தும் என்று பேசினார்.

8a scaled

பள்ளிச் செயலர் கவிதாசன் தலைமை தாங்கி பேசுகையில்: வீடுகளில் இயங்கும் கூரை விசிறிக்கும் மேசை விசிறிக்கும் இடையிலான செயல்பாட்டு வேறுபாட்டை நீங்கள் கூர்ந்து கவனித்ததுண்டா? அனைத்தின் பின்னணியிலும் ஓர் அறிவியல் உண்மை புதைந்துள்ளது. கூரை விசிறி அறையின் முழுப் பரப்பிற்கும் மேலிருந்து கீழ்நோக்கிப் பரவலான காற்றுச் சுழற்சியை அளிக்கிறது; மேசை விசிறி பின்புறக் காற்றை உறிஞ்சி ஒரு குறிப்பிட்ட திசையில் நேரடியாகவும் அதிவேகமாகவும் வீசுகிறது.

விழாக்காலங்களில் வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவதன் அறிவியல் நோக்கம் என்னவென்றால், அது வாடாமல் தொடர்ந்து பத்து நாட்களுக்கு பிராணவாயுவை வழங்கிக்கொண்டே இருக்கும்.

8c scaled

தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டபோதும், தாயின் ஊக்கத்தால் ஆயிரத்து அறுநூறுக்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை உலகுக்குத் தந்தார். மின்விளக்கைக் கண்டறிய பத்தாயிரம் முறை முயன்றவர் அவர். எந்தவொரு செயலிலும் முழுமையான ஈடுபாடு இன்றியமையாதது என்று பேசினார்.

விழாவில், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.