எல்.சி மருத்துவ அறக்கட்டளை மற்றும் எஸ்.வி.ஹெச்.பி நண்பர்கள் இணைந்து கவுண்டம்பாளையத்தில் உள்ள கருணை இல்லத்தில், தீபாவளியை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள், உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நிகழ்வில் எல்.சி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் வித்யா ராஜன் புத்தாடைகளை வழங்கினார்.

