கோவை சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகளுக்கிடையிலான டென்னிஸ் மற்றும் கூடைப்பந்து போட்டிகள் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் நடைபெற்றன. டென்னிஸ் போட்டியில் சச்சிதானந்த பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.

டென்னிஸ் போட்டியில் 8 பள்ளிகள் பங்கேற்றன. 12,14,17,19 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கெனத் தனித்தனியாக நடைபெற்ற போட்களில், மாணவர்கள் மற்றும் மாணவியர் பிரிவுகள் இரண்டிலும் சச்சிதானந்த பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.

கூடைப்பந்து போட்டியில் 11 பள்ளிகள் பங்கேற்றன. 14,17,19 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கெனத் தனித்தனியே நடைபெற்ற போட்டிகளில், சச்சிதானந்த பள்ளியின், 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள், மாணவியர் அணிகள் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றன.

14 வயதிற்குட்பட்ட மாணவியர் மற்றம் 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர். 14 வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தினைச் சச்சிதானந்த பள்ளி பெற்றது.

14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தினையும், அனைத்துப் பிரிவு மாணவ மாணவியருக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தினையும் கோயம்புத்தூர் சி.எஸ் அகாடமி பள்ளி பெற்றது.

பள்ளிச் செயலர் கவிதாசன், வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்குக் கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். சாம்பியன் பட்டம் பெற்ற சச்சிதானந்த பள்ளி மாணவ மாணவியரை நிர்வாக அறங்காவலர்  ராமசாமி வாழ்த்தினார். பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், கல்விப்புல முதன்மையர் ஷீலா கிரேஸ் ஆகியோர் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.