சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டுக் குழுவின் சார்பில், “கருப்பையும் மகளிர் நலமும்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் சுரேஷ் கலந்துகொண்டு பேசுகையில்: பெண்களின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு, உடல்நலப் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மற்றும் பெண்களின் ஆரோக்கியம் குறித்து வெளிப்படையாகப் பேசுவதன் அவசியம் ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

கல்லூரியின் தலைவர் லட்சுமிநாராயணசாமி, தலைவி சுகுணா, சுகுணா அறக்கட்டளையைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் கண்ணன், இயக்குநர் சேகர், மோகனசுந்தரம் மற்றும் முதல்வர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.