கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியின் ஆசிரியர் திறன் மேம்பாட்டு மையமும், ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல் துறையும் இணைந்து நடத்திய “தமிழர் மரபும், தொழில்நுட்பமும்” என்ற தலைப்பி ல் ஒரு வார கால ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் நடைபெற்றது.
நிறைவு நாளில், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் அனிதா சோபியா மார்கரெட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். “தமிழர்களின் திணைக் கோட்பாடுகள், தாவரங்கள் மற்றும் விலங்குகள்: சங்ககாலக் கல்வி மற்றும் வணிகம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி, பயிற்சியில் கலந்துகொண்ட பேராசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
