கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ கனிமொழி வழங்கினார்.

14 c scaled

இந்நிகழ்வில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை வழங்கி, குழந்தைகள் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வளர வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

14 a 2 scaled

குழந்தைகளின் பிறப்பைக் கொண்டாடும் வகையிலும், குடும்பங்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையிலும் இத்தகைய திட்டங்கள் அமைகின்றன. இத்திட்டத்தைச் செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். நிகழ்வின்போது, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (டீன்) டாக்டர் கீதாஞ்சலி உடனிருந்தார்.