பண்டிகை காலத்தை முன்னிட்டு கோவை-ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை-ஜெய்ப்பூர் சிறப்பு ரயில் (06181), வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, சனிக்கிழமை மதியம் 1.25 மணிக்கு ஜெய்ப்பூர் சென்றடையும். இந்த ரயில் நவம்பர் 26ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வழித்தடத்தில் ஈரோடு ரயில் நிலையத்தை அதிகாலை 4.05 மணிக்கு சென்றடையும் ரயில், 4.10 மணிக்கு அங்கிருந்து புறப்படும்.
மறுமார்க்கத்தில் ஜெய்ப்பூர்-கோவை சிறப்பு ரயில் (06182), ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.05 மணிக்கு ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்டு, புதன்கிழமை காலை 8.30 மணிக்கு கோவை வந்தடையும். இந்த சேவை வருகிற 11ம் தேதி முதல் நவம்பர் 29ம் தேதி வரை இயக்கப்படுகிறது.
இந்த ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை புதன்கிழமை அதிகாலை 4.50 மணிக்கு சென்றடைந்து, 4.55 மணிக்கு கோவை நோக்கி புறப்படும்.
