கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் மேல் குறிப்பிட்ட நேரத்தில் தற்காலிக மின் தடை ஏற்படும். அவ்வாறு நாளை (9.10.26) கோவை மாவட்டத்தில் உள்ள 2 துணை மின்நிலையங்களில் மின்தடை ஏற்படவுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்
இருகூர் துணை மின் நிலையம் : இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ்.
சோமையம்பாளையம் துணை மின் நிலையம் : யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, ஜிசிடி நகர், லூனா நகர், கணுவாய், தடாகம் சாலை, சோமையம்பாளையம், அகர்வால் பள்ளி சாலை, நமீதா கார்டன், சேரன் தொழில்துறை பகுதி, கே.என்.ஜி. புத்தூர், வித்யா காலனி, சாஜ் கார்டன், டீச்சர்ஸ் காலனி, வி.எம்.டி நகர், அப்துல்கலாம் காலனி, மேகலாமணி ரோடு.

