வயிறு காலியாக இருப்பதும், பசியும் வேறு வேறு விஷயங்கள். பலரும் வயிறு காலியாக இருக்கும் உணர்வை பசி என்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள், ஆனால் யோக அறிவியலின்படி இவை இரண்டும் முற்றிலும் வெவ்வேறானவை என சத்குரு கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: வயிறு காலியாக இருப்பது என்பது வெறும் ஒரு உடல்ரீதியான உணர்வு மட்டுமே. நாம் சாப்பிட்ட உணவு ஜீரணமாகி வயிறு சுத்தமாக இருக்கும் நிலையைக் குறிக்கிறது. பசி என்பது உடலின் ஆற்றல் அளவு குறையும் போது மட்டுமே உண்மையான பசி ஏற்படுகிறது. வயிறு காலியாக இருந்தாலும் உடலில் போதுமான ஆற்றல் இருந்தால் அது பசி அல்ல.

நமது உடலும் மூளையும் தங்களின் மிகச்சிறந்த திறனுடன் செயல்படுவது வயிறு காலியாக இருக்கும்போதுதான்.

உணவை ஜீரணிக்கும் பணி வயிற்றில் நடந்து கொண்டிருக்கும் வரை, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் மற்றும் செல்களைப் புதுப்பிக்கும் பணி முடங்கிப்போகிறது. வயிறு காலியாக இருக்கும்போது மட்டுமே உடலால் தன்னைத்தானே சரிசெய்து தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்.

யோக விஞ்ஞானத்துல மட்டுமில்லை, இப்போது நவீன அறிவியலும் இதை ஒத்துக்கொள்கிறார்கள். இரண்டு அல்லது இரண்டரை மணி நேரத்துக்குள் வயிறை விட்டு வெளியேறி, வயிறு காலியாகிவிட வேண்டும். அந்த அளவிற்கு எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை (யோக உணவுமுறை) உட்கொள்ள வேண்டும்.

ஏன் என்றால் உடம்பில் எதையாவது சரி பண்ண வேண்டும் என்றாலும், சுத்தப்படுத்த வேண்டும் என்றாலும் வயிறு காலியாக இருக்கவேண்டும். இது ரொம்ப ரொம்ப முக்கியமானது. ஒரு நாளைக்கு இரு வேளை மட்டுமே உணவருந்துவது மற்றும் இடையில் தேவையற்ற நொறுக்குத்தீனிகளைத் தவிர்ப்பது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். இவ்வாறு அவர் கூறினார்.