உலகளாவிய மின்சார வாகன உச்சி மாநாடு மற்றும் புத்தாக்கக் கருத்தரங்கு 2026-ன் ஒரு பகுதியாக, ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திரப் பொறியியல் துறை மற்றும் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறை ஆகியவை இணைந்து மின்-இயக்கம் சார்ந்த ஹேக் ஃபெஸ்ட் போட்டியை நடத்தின.

போட்டியில் 193 குழுக்களைச் சேர்ந்த சுமார் 350 மாணவர்கள் பங்கேற்று, மின்சார வாகனப் போக்குவரத்துத் துறையில் எழும் சவால்களுக்குத் தீர்வு காணும் வகையிலான புதுமையான யோசனைகள், தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை முன்வைத்தனர். இறுதிச் சுற்றுகளுக்கு 54 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கல்லூரி முதல்வர் டேவிட் ரத்னராஜ், இயந்திரப் பொறியியல் துறைத் தலைவர் சரவண குமார், மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறைத் தலைவர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த டெக் டைட்டன்ஸ் குழு ஒட்டுமொத்த வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டு, ரூ.15,000 பரிசு மற்றும் கோப்பையைப் பெற்றது.

வி.எஸ்.பி பொறியியல் கல்லூரியின் ஷீ கோட்ஸ் குழு ஒட்டுமொத்தப் போட்டியில் 2ம் இடத்தைப் பிடித்து, ரூ.10,000 பரிசும், என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரியின் ஸ்பார்டன் குழு 3ம் இடத்தைப் பிடித்து ரூ.5,000   வென்றது.

புத்தாக்கம், தொழில்நுட்பத் திறன் மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்களை அங்கீகரிக்கும் வகையில் மூன்று சிறப்பு விருதுகளும், பத்து துறைசார் விருதுகளும்  வழங்கப்பட்டன.