கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்த்துறை மற்றும் திருக்குறள் உலகம் கல்விச்சாலை இணைந்து வழங்கும், அனைத்துக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணாக்கர்களுக்கான திருக்குறள் ஏழு பெருந்திறன் திருவிழா வரும் 29ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில், அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணாக்கர்கள் கலந்து கொள்ளலாம். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தின் சார்பாகப் பங்கேற்கும் மாணாக்கர்களுக்கு அடையான அட்டை அவசியம். வெற்றிபெறும் மாணவர்களுக்குப் பரிசுத் தொகையுடன் சான்றிதழும், பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழும் வழங்கப்படும். முன்பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள்: 22.10.2026.

மேலும் விபரங்களுக்கு: தங்கமணி -99947-50177, கணேசன் -99948-92756.