எல்.சி மருத்துவமனையின் தலைவரும், தலைமை அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பி.எஸ். ராஜனுக்கு, ஆதித்யா டிவி சார்பில் ‘சிறந்த அறுவை சிகிச்சை இரைப்பைக் குடலியல் நிபுணர் விருது-2026’ வழங்கப்பட்டுள்ளது.

கோவையில் ஆதித்யா டிவி நடத்திய ‘ஆயுத பூஜை சிறப்பு பட்டிமன்றம்’ நிகழ்ச்சியில், அறுவை சிகிச்சை இரைப்பைக் குடலியல் துறையில் அவர் ஆற்றிவரும் சேவைகளைப் பாராட்டி, இந்த விருது வழங்கப்பட்டது.

பிரபல தமிழ்ப் பேச்சாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் அரிமா அமைச்சரவைச் செயலாளர் ராமசுப்பிரமணியன், ஜனாஷா டிஎன் நிதி லிமிடெட் நிறுவனத்தின் நந்தகுமார் ஆகியோர் இணைந்து விருதை வழங்கினர்.

டாக்டர் பி.எஸ். ராஜன், மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள், அறுவை சிகிச்சை இரைப்பைக் குடலியல் மற்றும் எண்டோஸ்கோபி உள்ளிட்ட சிறப்பு மருத்துவச் சேவைகளில் அனுபவம் பெற்றவர்.

அவரது தலைமையில் எல்.சி மருத்துவமனை, இரைப்பைக் குடல் தொடர்பான நோய்கள் மற்றும் மகளிர் நலப் பிரச்சினைகளுக்குச் சிறப்பு மருத்துவச் சேவைகளை வழங்கி வருகிறது.