பாரதியார் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான 2026–27ஆம் கல்வியாண்டிற்கான ஆண்கள் மேசைப்பந்து போட்டி, கோவை பி.எஸ்.ஜி.  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்றது.

இதன் துவக்கவிழாவில் பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் ஆர். ராஜவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். கல்லூரியின் செயலாளர் டி. கண்ணையன், கல்லூரி முதல்வர் எம். ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
TT BU scaled

மேலும், பாரதியார் பல்கலைக்கழக போட்டிகளுக்கான சிறப்பு நிர்வாகக் குழு உறுப்பினர்களான ஆர். ராஜ்குமார், மஞ்சு புஷ்பா, பி. ஸ்ரீதர் மற்றும் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ்.டி.என். ராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை, பாரதியார் பல்கலைக்கழக ஆண்கள் மேசைப்பந்து போட்டியின் ஒருங்கிணைப்பாளரும், பி.எஸ்.ஜிகல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குநருமான பி. நவநீதன் தலைமையில் உடற்கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
TT BU BOYS scaledஇந்தப் போட்டியில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 10 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. பல்வேறு கல்லூரிகளின் உடற்கல்வித்துறை இயக்குநர்கள் மற்றும் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியின் மூலம் பாரதியார் பல்கலைக்கழக ஆண்கள் மேசைப்பந்து அணி தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்படும் பல்கலைக்கழக அணி, வரும் டிசம்பர் மாதம் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கீதம் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மேசைப்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளது.