தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், ரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் கால்பந்து, கபடி, பால் பேட்மிண்டன், குத்துச்சண்டை மற்றும் ஜூடோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சாம்பியன் பட்டங்களையும், பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

2.d scaled

2. a scaled

2. e scaled

2. c 1 scaled

ஆண்கள் கால்பந்து போட்டியில் 120 அணிகள் பங்கேற்ற நிலையில், இப்பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. ஆண்கள் கபடி போட்டியில் 88 அணிகளுக்கு மத்தியில் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல், பெண்கள் கபடி போட்டியில் 18 அணிகளுக்கு மத்தியில் மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பெண்கள் பால் பேட்மிண்டன் போட்டியில், 15 அணிகள் பங்கேற்ற நிலையில், மூன்றாம் இடத்தை பெற்றது.

ஆண்கள் குத்துச்சண்டைப் போட்டியில் 197 அணிகள் பங்கேற்ற நிலையில், அஸ்வின் ரமேஷ், தமிழ்செல்வன், ஆகாஷ் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர். பெண்கள் குத்துச்சண்டைப் போட்டியில், 50 அணிகள் பங்கேற்ற நிலையில், ஆதித்யா தங்கப் பதக்கம் வென்றார்.

ஜூடோ போட்டியில் ஜீவானந்தன், சதீஷ் குமார்,  விகாஷ் ஆகியோர் தங்கப் பதக்கங்களையும், காவியா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். மஸில் மேன் 2026 போட்டியில் மாணவர் உதய் கிஷோர் 6-வது இடத்தைப் பெற்றார்.

சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழக நிர்வாகம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.