தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி வரும் 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும்.

மசாலா பொடிகள், தயார்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், கத்தரிக்காய் ஊறுகாய், வெங்காய ஊறுகாய் ஆகிய மதிப்பூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770 பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும்.