ரத்தினம் குளோபல் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவி பூங்குழலி, தேசிய அளவிலான என்சிசி போட்டிகளில் சாதனை படைத்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய தல் சைனிக் முகாம் 2026 போட்டிக்கு பூங்குழலி தேர்வு செய்யப்பட்டார். இதில் நடைபெற்ற ஜெ.டி.எஃப்.எஸ் போட்டியில் அகில இந்திய அளவில் 6வது இடத்தைப் பெற்றார்.

மேலும், 2026-ம் ஆண்டு நடைபெற்ற குழுக்களுக்கு இடையிலான போட்டியில் பணிசார் பாடத்திட்டம் மற்றும் ஜெ.டி.எஃப்.எஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் தேசிய அளவிலான என்சிசி போட்டிகளில் மொத்தம் இரண்டு தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார்.

மாணவி பூங்குழலியின் இந்த சாதனைக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.