கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி நிறுவனங்கள் நடத்திய விழாவில், பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளி முதல்வர் வித்யாசங்கருக்கு, சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவத்தைப் பாராட்டும் வகையில், ‘உத்வேகம் அளிக்கும் கல்வித் தலைவர் விருது’ வழங்கப்பட்டது. இதனை புகழ்பெற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை விழாவில் வழங்கினார். இந்த அங்கீகாரத்திற்காகப் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
