கோவை, கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் ஆசிரியர் தின விழா, நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா மற்றும் ஐஎஸ்ஓ தரச் சான்று – செயல்முறைகள் தொடக்க விழா ஆகிய மூன்று நிகழ்வுகள் நடைபெற்றன.

விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியரும், நல்லாசிரியர் விருது பெற்றவருமான சிவகுமார் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக செல்வம் ஏஜென்சிஸ் உரிமையாளர் நந்தகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் கவிதாசன் மற்றும் முதன்மை நிதி அதிகாரி ரவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் ஐஎஸ்ஓ ஆலோசகர் பாலச்சந்தர் திட்டத்தை பற்றி எடுத்துரைத்தார்.
மாணவர்களின் கல்வி, விளையாட்டு, திறன் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ரூட்ஸ் நிறுவனங்களின் சார்பில், கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
