சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

கோயம்புத்தூர் என்.சி.சி. தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் பிரவீன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில்: குழுப்பணி, தலைமைப் பண்பு, சுய ஒழுக்கம், பொறுமை, நேர மேலாண்மை ஆகியவற்றை விளையாட்டைப் போல ஆழமாகக் கற்றுத்தர வேறு எந்தச் செயல்பாட்டாலும் இயலாது.

விளையாட்டுகளில் ஈடுபடுவது மனித உறவுகளை மேம்படுத்தி, ஒருவருக்கொருவர் இடையே ஆழமான பிணைப்பை உருவாக்குகிறது என்று ஹார்வர்ட் ஆய்வு கூறுகிறது. வெற்றியின் போது பணிவையும், வீழ்ச்சியின் போது மீண்டும் துணிந்து எழும் மனப்பக்குவத்தையும் விளையாட்டு மட்டுமே தரும் என்று பேசினார்.

12b 2 scaled

பள்ளிச் செயலர் கவிதாசன் பேசுகையில்: மற்ற உயிரினங்களின் துணை இல்லாமல் மனிதனால் வாழ முடியாது; ஆனால் மனிதன் இல்லை என்றால் மற்ற உயிரினங்கள் மகிழ்ச்சியாக வாழும். 10,008 மரக்கன்றுகளை ஒரே நாளில் நட திட்டமிட்டிருக்கிறோம் என்று பேசினார்.

12c scaled

பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி வாழ்த்துரை வாசிக்கப்பட்டது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மேனாள் இயக்குநர் தேவராஜன், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பிரியங்கா ஸ்ரீகாந்த், ரகுராம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

12d 3 scaled

பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பிருத்வி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தினைப் பெற்றது. வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்குக் கோப்பைகள், கேடயங்கள் வழங்கப்பட்டது. பள்ளியில் படிக்கின்ற மாணவ மாணவியரின் தம்பி தங்கைகளுக்கான ஓட்டப்பந்தயங்கள் நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.