டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், ஹைதராபாத் நகரில் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில், எம்.சி.இ.டி. முன்னாள் மாணவர் சங்கத்தின் ஹைதராபாத் கிளை தொடங்கப்பட்டது.
கல்லூரியின் முதல்வர் கோவிந்தசாமி, துணை முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். பல்வேறு துறைகள் மற்றும் வெவ்வேறு கல்வியாண்டுகளைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
ஹைதராபாத் கிளையின் நிர்வாக அமைப்பின் ஒரு பகுதியாக, 2002ம் ஆண்டு இயந்திரப் பொறியியல் துறை முன்னாள் மாணவரான சிவசண்முகசுந்தரம், ஹைதராபாத் கிளையின் தலைவராகப் பரிந்துரைக்கப்பட்டார்.
