கோவையில் திடீரென பெய்த மழையின் காரணமாக வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கோவையில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகளவு இருந்து வந்தது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்றும் மாநகரில் காலை முதல் வெயில் அதிகமாக கணிக்கப்பட்ட நிலையில் மதியத்திற்கு மேல் வானிலை மாறி திடீரென பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்ததது.
குறிப்பாக தடாகம் சாலை, வெங்கடாபுரம் வேலாண்டிபாளையம், கோவில்மேடு, இடையர்பாளையம், கவுண்டம்பாளையம், கவுண்டர் மில்ஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் ரெயின்கோட் அணிந்த வண்ணம் சென்றனர். சாலைகளில் நடந்து செல்வோர் பலரும் குடைகளை பிடித்த வண்ணம் சென்றனர்.
கோவை கடந்த சில தினங்களாக வெயில் அதிகமாக இருந்த நிலையில் தற்போது காற்றுடன் கூடிய மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
