கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் உலகப் படைப்பாற்றல் மற்றும் புதுமை தினத்தை முன்னிட்டு “படைப்பாற்றல் வெற்றியின் ரகசியம்” எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக எஸ்.என்.எம்.வி கலை அறிவியல் கல்லூரியின் தலைமை நூலகர் உமாமகேஸ்வரி கலந்துகொண்டு, மாணவர்கள் தங்கள் புதிய சிந்தனைகளையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தி வாழ்வில் எவ்வாறு வெற்றி பெறலாம் என்பது குறித்து சிறப்புரயாற்றினார். தொடர்ந்து ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
