மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை, செப்டம்பர் 28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரயில் (எண்: 06030) செப்., 6 முதல் 27 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:30 மணிக்கு மேட்டுப்பாளையம் நிலையத்தை சென்றடையும்.
இதேபோல், மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு ரயில் (எண்: 06029) செப்., 7 முதல் 28 வரை திங்கள்கிழமைகளில் இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:05 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
இந்த ரயில் கோவை, போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லுார், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
