காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரனின் 64வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் காருண்யா நலவசதி சங்கம் சார்பில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இறுதி கிரிக்கெட் போட்டியில் இவாஞ்சலின் மெட்ரிக் மேனிலைப்பள்ளி வெற்றி பெற்றது. காருண்யா நலவசதி சங்க செயலர் ஜெபக்குமார் செல்வின் பரிசு கோப்பையை வழங்கினார். பரிசளிப்பு விழாவில் காருண்யா நலவசதி சங்க உறுப்பினர்கள் ஜெபசிங், பேராசிரியர்கள் நிர்மல், காட்சன், ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Previous

