கோவை, அவினாசி சாலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் பகுதியில் இரு புறங்களிலும், நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில், புதிதாக நிழற்குடை அமைப்பது தொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அவிநாசி சாலை உப்பிலிபாளையம் முதல் கே.எம்.சி.ஹெச் வரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் பகுதியில் இரு புறங்களிலும் உள்ள பேருந்து நிறுத்தங்களில், பழுதடைந்த நிழற்குடைகள் புனரமைப்பது தொடர்பாகவும், நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதியதாக அமைக்கப்படவுள்ள பயணிகள் நிழற்குடை தொடர்பாகவும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
