டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராமலிங்கர் பணிமன்றத்தின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற்றது.
பேச்சுப்போட்டியில் இக்கல்லூரி மாணவி மதுமிதா முதல் பரிசாக ரூ.5000 பெற்றார்.
பாரதியார் பல்கலைக்கழகம் மாணவி மாதரசி 2ம் பரிசாக ரூ.3000, கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் தமிழவன் 3ம் பரிசாக ரூ.2000 பெற்றனர்.
பள்ளி இசைப்போட்டியில் ஸ்ரீவாகீஸ்வரி வித்யாமந்திரி மேல்நிலை பள்ளி மாணவி மதுரகவி முதல் பரிசாக ரூ.5000, பாரதி வித்யபவன் மேல்நிலைப்பள்ளி மாணவி அனுவர்ஷினி 2ம் பரிசாக ரூ. 3000, ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளி மாணவர் வசீகரன் 3ம் பரிசாக ரூ.2000 பெற்றனர்.
பள்ளி மனனப் போட்டியில் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தானவிகா முதல் பரிசாக ரூ.5000, சக்தி மேல்நிலைப்பள்ளி மாணவி மேதினி, பூஜா ஸ்ரீ 2ம் பரிசாக
ரூ.3000, நாச்சிமுத்துக்கவுண்டர் ருக்மணி அம்மாள் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி மீரா 3ம் பரிசாக ரூ.2000 பெற்றனர்.
பள்ளிப் பேச்சுப்போட்டியில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப்பள்ளி மாணவர் பிரகலாதன் குமாரசாமி முதல் பரிசாக ரூ. 5000, சி. விசலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷாரு 2ம் பரிசாக ரூ.3000, பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அர்ஷின்சனா 3ம் பரிசாக ரூ.2000 பெற்றனர்.
நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் சரவணன், ராமலிங்கர் பணிமன்றத்தின் பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன்,
ஒருங்கிணைப்பாளர் தியாகு, பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
