கோவை அவிநாசி ரோடு – நீலாம்பூர் பகுதியில், கதிர் இன்ஜினியரிங் கல்லூரி சாலை அருகே 200 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் நகரம் ‘கார்த்திபுரம்’.
குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட கார்த்தி புரத்தில், ஆயிரக்கணக்கான மனைகள் விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளன.

இதில் முதல் கட்டமாக 101 வீடுகளுக்கான மாபெரும் வாஸ்து பூஜை இன்று காலை 7.23 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
வாஸ்து தின நிகழ்ச்சியில், பிரபல சின்னத்திரை நட்சத்திரம் ஈரோடு மகேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இவ்விழாவின் மிக முக்கிய அம்சமாக, வாஸ்து பூஜை செய்த 101 வாடிக்கையாளர்களின் சொந்த வீடு கனவை நனவாக்கும் வகையில், வீடு கட்டத் தேவையான முக்கிய கட்டுமானப் பொருட்களானசிமெண்ட், கட்டுமான ஸ்டீல், பிளைஆஷ் பிரிக்ஸ் செங்கற்கள், உயர்தர டைல்ஸ் மற்றும் PVC பைப் & டேங்க், மோட்டார் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கார்த்திபுரம் நகர திட்டத்தின் தாய் ஸ்தாபனமான ‘உண்ணாமலை புரமோட்டர்ஸ்’ சார்பாக இலவச அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு குறித்து உண்ணாமலை புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பழனியப்பன் கார்த்திகேயன் பேசுகையில்:-

” இந்த நகரை விரைந்து அபிவிருத்தி செய்து மக்களுக்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்ற ஒரு நோக்கத்தை மனதில் கொண்டு, 101 வீட்டிற்கு இன்று வாஸ்து பூஜை செய்து உள்ளோம்,” என கூறினார்.
