தமிழ்நாட்டின் 6 முக்கிய இடங்களில் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி ஈஷா கிராமோத்சவத்தின் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் பங்கேற்கும்  இறுதிப்போட்டி, வரும் செப்டம்பர் 6ம் தேதி கோவை ஆதியோகி வளாகத்தில்  நடைபெறவுள்ளது.

6.d scaled

இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் ஈஷா கிராமோத்சவத்தின் தன்னார்வலர்கள் சுந்தர், மகேந்திரன் ஆகியோர் பேசுகையில்: இப்போட்டித் தொடரில் ஆண்களுக்கான வாலிபால், பெண்களுக்கான த்ரோபால் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கிராமப்புறங்களைச் சேர்ந்த மீனவர்கள், விவசாயிகள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

6. b 5 scaled

இந்தாண்டு புதிதாக உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வட மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி இணைந்து மொத்தம் 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டில் சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகள் நடைபெற்றன. இதில் வாலிபால் பிரிவில் 2,246 அணிகளைச் சேர்ந்த 26,952 வீரர்களும், த்ரோபால் பிரிவில் 31 இடங்களில் 744 அணிகளைச் சேர்ந்த 7,440 வீரர்களும் பங்கேற்றனர். முதற்கட்டப் போட்டிகளில் மொத்தம் சுமார் 34,392 கிராமப்புற மக்கள் பங்கேற்று விளையாடினர்.

அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் கோவை, சேலம், வேலூர், மதுரை, திருநெல்வேலி, கடலூர்  உள்ளிட்ட 6 இடங்களில் மண்டல அளவிலானப் போட்டிகள் ஆகஸ்ட் 23ம் தேதி நடைபெறவுள்ளன.

6. ish a scaled

பரிசுத்தொகை

இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 6 அன்று கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குரு முன்னிலையில் நடைபெறும். போட்டியில் வெல்லும் கைப்பந்து, எறிபந்து அணிகளுக்கு தலா ரூ.5 லட்சமும், இரண்டாம் இடத்திற்கு ரூ.3 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.1 லட்சமும், ரூ.50,000-மும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

6 மண்டலங்களிலும் தேர்வு செய்யப்படும் சிறந்த பெண் த்ரோபால் வீராங்கனைகளுக்கு எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்படவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பிரத்யேகப் பரிசுகள் வழங்கப்படும்.