ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் வியட்நாம் ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகம் இடையே கல்வி ஒத்துழைப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தத்தை கல்லூரியின் முதல்வர் சிவகுமார் மற்றும் வியட்நாம் ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் ரிச்சர்ட் ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.

நிகழ்வில் கல்லூரியின் தேர்வாணையர் செந்தில்குமார், துறைத் தலைவர்கள் சந்தான கிருஷ்ணன், பிரபு வெங்கடேஷ், மரியா பிரிசில்லா, சுமதி, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் பொது மேலாளர் (மக்கள் தொடர்பு) பிரகதீஸ்வரன் மற்றும் கலந்து கொண்டனர்.

தொழில்நுட்பம் மற்றும் அறிவுப் பரிமாற்றம், சர்வதேச கல்வி வாய்ப்புகள், பாடத்திட்ட மேம்பாடு ஆகியவை ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும். மாணவர்களின் சர்வதேச கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், ஆராய்ச்சித் தரத்தை உயர்த்தவும் இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.