தேசிய வாய்ச் சுகாதார தினத்தை முன்னிட்டு, கோவை கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியில், மாணவர்களுக்கு இலவச பல் பரிசோதனை மற்றும் வாய் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் தினகர், இந்திய பல் மருத்துவ சங்கம், கோயம்புத்தூர் கிளையைச் சேர்ந்த டாக்டர் சுரேந்திரன், டாக்டர் பாபு, பள்ளியின் தலைவர் அழகிரிசாமி, பள்ளியின் முதல்வர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்களின் வாய்ச் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், விரிவான பல் பரிசோதனை, வாய்ச் சுகாதார விழிப்புணர்வு, பல் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மற்றும் தொடர் சிகிச்சை தேவைப்படும் மாணவர்களை உரிய சிகிச்சைக்கு பரிந்துரைத்தல் ஆகியவை இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்களாக இருந்தன.
பல் மருத்துவக் குழுவினர் மாணவர்களுக்கு பல் பரிசோதனை மேற்கொண்டதுடன், முறையான வாய்ச் சுகாதாரப் பழக்கவழக்கங்கள் மற்றும் வழக்கமான பல் பரிசோதனையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், தொடர் சிகிச்சை தேவைப்படும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, உரிய சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
