ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது.
முன்னாள் மாணவிகள், தங்களது கல்லூரிக் கால அனுபவங்கள், நண்பர்களுடனான நினைவுகள் மற்றும் ஆசிரியர்களுடனான தருணங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
தங்களுக்குக் கல்வியையும், வாழ்க்கைக்கான வழிகாட்டுதலையும் வழங்கிய கல்லூரி நாட்களைப் பூரிப்புடன் நினைவுபடுத்தி மகிழ்ந்தனர். முன்னாள் மாணவிகள் சங்கத்தின் சார்பில் தற்போது படிக்கும் மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. முன்னாள் மாணவியர் அமைப்பின் செய்திமடல் வெளியிடப்பட்டது.
எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், முன்னாள் மாணவிகளின் சாதனைகளே கல்லூரியின் பெருமை எனக் குறிப்பிட்டு வாழ்த்தியதோடு தலைசிறந்த முன்னாள் மாணவிக்கான விருதையும் வழங்கினார்.
கல்லூரி முதல்வர் சித்ரா, கல்லூரி வாழ்வை நிறைவு செய்தாலும், கல்லூரியுடனான மாணவிகளின் உறவு என்றும் தொடரும். தொடர்ந்து முன்னாள் மாணவிகள் கல்லூரியோடு இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
