உலக உறுப்பு தான வாரத்தை முன்னிட்டு, பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் கோவை இணைந்து உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்திய மருத்துவ சங்கம் கோவை தலைவர் டாக்டர் கோஷலராம், இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு, ரத்தம் மற்றும் உறுப்பு தானக் குழுத் தலைவர் டாக்டர் ராஜேஷ் பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் உறுப்பு தானம்-உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் உயிர்களைக் காத்தல் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் மருத்துவமனையின் சிறுநீரக மாற்று சிகிச்சை டாக்டர் வசந்த், டாக்டர் பூவை முருகன், இதய மாற்று சிகிச்சை டாக்டர் முருகன், டாக்டர் அனந்தநாராயணன், கல்லீரல் மாற்று சிகிச்சை டாக்டர் வெங்கடகிருஷ்ணன், டாக்டர் கிருபாகரன், டாக்டர் பிகு ஜோசப் ஜான், கார்னியா மாற்று சிகிச்சை டாக்டர் திவ்யா, டாக்டர் சுந்தர், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை டாக்டர் சஷி ரஞ்சனி, டாக்டர் ரேஷ்மி ஹரிகுமார் பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் புவனேஸ்வரன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் வருண், பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சுப்பாராவ்,
இந்திய மருத்துவ சங்கம் கோவை கௌரவச் செயலாளர் டாக்டர் பரமேஸ்வரன், பொருளாளர் டாக்டர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
