இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 22வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக வாஷிங்டன், மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன், மூத்த மென்பொருள் பொறியாளர், வெற்றிவேல் பெரியையா கலந்துகொண்டு பேசுகையில்: வாழ்க்கையில் வெற்றி தோல்விகளை சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும். வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் துறை சார்ந்த அடிப்படை கல்வியை வளர்த்துக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு யுகத்தில் அடிப்படை கல்வி இன்றியமையாதது,
தொழில் நுட்ப வளர்ச்சி வேலை ஆகியவற்றைக் கடந்து ஆரோக்கியமே மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.
இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி, சமுதாயத்தில் சிறப்பாக செயல்பட்டு எதிர்காலத்தில் உயர்ந்த பதவிகளை அடைய வாழ்த்தினார்.
நிர்வாக செயலாளர் பிரியா வாழ்த்துரை வழங்கினார். 1423 பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்வில் கல்லூரி முதல்வர் ஜெயா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
