பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கான மாணவர் மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவர் நந்தினி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஹாரதி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வை நடத்தி வைத்தார்.

3. grg scaled

தலைமை விருந்தினராக வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் லிமிடெட் துணைத் தலைவர் சிவக்குமார் கணேசன் கலந்துகொண்டு பேசுகையில்: இன்றைய போட்டி நிறைந்த உலகில் தொடர்ச்சியான கற்றல், திறன் மேம்பாடு, புதுமை சிந்தனை மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைத் தயார்படுத்திக் கொள்வது அவசியம்.

தொழில்துறைக்கு ஏற்ற திறன்களை வளர்த்துக்கொண்டு, வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கு முக்கியத்துவம் அளித்து, எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு தன்னம்பிக்கையுடன் தயாராக இருக்க வேண்டும் என்றார்.