ஸ்ரீராம் இலக்கியக் கழகம், கோவையில், அண்மையில் நடத்திய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் சார்ந்த பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் 194 மாணவர்கள் பங்கேற்றனர்.

சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், பேச்சுப் போட்டியில் 89 மாணவர்களும், ஓவியப் போட்டியில் 63 மாணவர்களும், கட்டுரைப் போட்டியில் 42 மாணவர்களும் என மொத்தம் 194 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோவை, காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  வேல்முருகன் பரிசுகளை வழங்கினார். ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் முதுநிலை மண்டல மேலாளர் சக்திவேல் கலந்து கொண்டார்.

பேச்சுப் போட்டி இடைநிலைப் பிரிவில் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் கார்நிஷ், மேல்நிலைப் பிரிவில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவர் பிரகலாதன் குமாரசாமி, கல்லூரிப் பிரிவில் பண்ணாரியம்மன் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர் அஸ்வின் அண்ணாமலை ஆகியோர்  முதல் பரிசு பெற்றனர்.

ஓவியப் போட்டி இடைநிலைப் பிரிவில் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி பிரிதிக் ஷா, மேல்நிலைப் பிரிவில் சுகுணா ஆர். ஐ. பி. வி. மேல்நிலைப் பள்ளி மாணவி ஹாசினிகா, கல்லூரிப் பிரிவில் என். ஜி. பி. தொழில்நுட்ப நிறுவனம் மாணவி சுப்ரியா ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.

கட்டுரைப் போட்டி இடைநிலைப் பிரிவில் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி பாண்டீஸ்வரி, மேல்நிலைப் பிரிவில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப்பள்ளி மாணவி கீர்த்திகா, கல்லூரிப் பிரிவில் பூ.சா.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி யுவஸ்ரீ ஆகியோர்  முதல் பரிசு பெற்றனர்.