இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் மை பாரத் ஆகியவற்றின் சார்பில் “விக்சித் பாரத் 2026 – க்கான போதைப்பொருள் இல்லா இளைஞர்கள்” என்ற தேசிய இயக்கத்தின் கீழ், இணையவழி நேரலை நிகழ்வாக நடைபெற்றது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சிவக்குமார் ஆலோசனைக்கு இணங்க “போதை இல்லா பாரதம் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி” கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்தியா முழுவதும் 125 -ற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இந்நேரலை நிகழ்வில் பங்கெடுத்தனர்.

1. modi snr scaled

 

தமிழ்நாட்டின் சார்பாக பங்கேற்ற 9 கல்வி நிறுவனங்களுள்  ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு, போதை இல்லா சமூகத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்வில் பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் ராஜவேல், கல்லூரியின் துணை முதல்வர் பூங்குழலி, தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் செந்தில்குமார், பாரதியார் பல்கலைக் கழகத்தின் நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரகதீஷ்வரன், கீர்த்திவாசன், சஹான பாத்திமா, சூர்யா, பாலுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.