சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான புதுமை மற்றும் திறன் வெளிப்பாட்டு விழா நடைபெற்றது.
நிகழ்வில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் சுகுணா கல்வி நிறுவனங்களின் தலைவர் லக்ஷ்மிநாராயணசாமி, தாளாளர் சுகுணா லக்ஷ்மிநாராயணசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, மாணவர்கள் கல்வியுடன் இணைந்து திறன் மேம்பாடு, படைப்பாற்றல் மற்றும் புதுமையான சிந்தனையை வளர்த்துக் கொண்டு உயர்ந்த இலக்குகளை அடைய வேண்டும் எனக் கூறினர்.

மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், கோப்பைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினர். நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் டீன் ரம்யா சந்தோஷ், கல்லூரி முதல்வர் கோவிந்தராஜலு, பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
