இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு பள்ளிகளுக்கிடையிலான அறிவியல் மற்றும் படைப்பாற்றல் விழா நடைபெற்றது.
கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 7 பள்ளிகளில் இருந்து 107 மாணவர்கள் பங்கேற்று, அறிவியல் அறிவு, புதுமைச் சிந்தனை, படைப்பாற்றல், குழுப்பணி மற்றும் பேச்சுத் திறன்களை வெளிப்படுத்தினர்.
அறிவியல் வினாடி-வினா, சுவரொட்டி வழங்கல், அறிவியல் மாதிரி, பென்சில் ஓவியம் மற்றும் ஜஸ்ட் எ மினிட் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
அனைத்து போட்டிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற சச்சிதானந்த ஜோதி நிகேதன் இன்டர்நேஷனல் பள்ளி ஒட்டுமொத்த சுழற்கோப்பையை வென்றது. அறிவியல் மாதிரி வழங்கல் போட்டியில் வென்ற கார்மல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு ‘சிறந்த புதுமையான யோசனை விருது’ வழங்கப்பட்டது.
கல்லூரி முதல்வர் பொன்னுசாமி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
