கோவை ரெட் பீல்ட்ஸ் பகுதியில் இயங்கும் முன்னணி மகளிர் கல்லூரியான நிர்மலா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.
கல்லூரியின் தமிழ்த்துறை (அரசு உதவிபெறும் பிரிவு) சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை வழக்குரைஞர் சோ. குருநந்திகேசன் அவர்கள் சட்டம் குறித்த அடிப்படைத் தகவல்களை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வு கல்லூரியின் செயலர் குழந்தை தெரேஸ், கல்லூரியின் முதல்வர் மேரி பபியோலா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்த்துறையின் தலைவர் மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.

தொடர்ந்து வழக்குரைஞர் சோ. குருநந்திகேசன் பேசுகையில், மதுவில்லாத சமூகம் உருவாக வேண்டும் என்ற மனப்பான்மையையும், மாணவர்கள் பரந்துபட்ட மனப்பான்மையோடும் மனித நேயத்தோடும் வாழ வேண்டும் எனவும் பேசினார்.
இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மாணவியர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
