டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் அலங்காரத்துறை, கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஐடியமேக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய கைத்தறி நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் சரவணன் விழாவினைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் ஆடை வடிவமைப்புத்துறை மாணவர்கள் கைத்தறி மூலமாக வடிவமைக்கப்பட்ட அலங்கார ஆடைகளை அணிந்து வந்து அணிவகுப்பு நடத்தினர். நிறைவாக மாணவர் ப்ரைசன் பொய், மாணவி மோனிகா ஸ்ரீ ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கோவை மக்கள் சேவை மையம், ஐடியா மேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் அமைப்பின் உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.