மனித இதயத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் “உயிரின் மறைமொழி” என்ற நூலை, இந்துஸ்தான் சுகாதார அறிவியல் கல்லூரியின் 2ம் ஆண்டு பி.எஸ்.சி. கார்டியாக் டெக்னாலஜி மாணவி ஸ்வேதா எழுதியுள்ளார்.
இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்நூலை எழுதியுள்ளார்.
நூல் வெளியீட்டு விழா இந்துஸ்தான் சுகாதார அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்துஸ்தான் கல்வி மற்றும் அறக்கட்டளையின் செயலாளர் பிரியா நூலின் முதல் பிரதியை வெளியிட, கல்லூரியின் முதல்வர் அருண்குமார் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் கார்டியாக் டெக்னாலஜி துறை பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.
கவிதேடல் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள், இருதய நோய்கள், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் அவசியம் மற்றும் தகுந்த நேரத்தில் சிகிச்சை பெறுவதின் முக்கியத்துவம் ஆகியவை வாசகர்களுக்கு புரியும் வகையில் விரிவாக இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன.
