கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரியின் தலைவர் பொங்கலூர் நா. பழனிசாமி தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறை ஆலோசகர் டாக்டர் கரிமா குப்தா கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.

அவர் பேசுகையில்: இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்ப அறிவுடன் புதுமைச் சிந்தனை, ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் தொழில்முனைவு திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு, உயிரித் தொழில்நுட்பம், நிலைத்த வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய துறைகளில் இளைஞர்கள் முக்கிய பங்காற்ற வேண்டிய காலம் இது என்றார்.

பல்வேறு பொறியியல், எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளைச் சேர்ந்த 789 மாணவ, மாணவியர்கள் பட்டம் பெற்றனர். கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் சிறப்பான சாதனைகளைப் பாராட்டும் வகையில் கே.ஐ.டி முன்னாள் மாணவர் விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கல்லூரியின் துணைத் தலைவர் இந்து முருகேசன், தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.