கலாஷா ஃபைன் ஜுவல்ஸ் சார்பில் பிரத்யேக கைவினை நகைக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சி ஜூலை 18 வரை அவிநாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் நடைபெறுகிறது.

2 4 scaled

கண்காட்சியை கலாஷா ஃபைன் ஜுவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரவண் குமார் குடூர் தொடங்கி வைத்தார். இதில் தங்கம், வைரம், போல்கி, ஜடாவ், கோயில் நகைகள் மற்றும் பழமையான வடிவமைப்பிலான ஆன்டிக் நகைகள் உள்ளிட்ட பல்வேறு கைவினை நகைத் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன.  பிரத்யேக சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

6 scaled

 

குறிப்பாக மணமகள்களுக்கான பிரத்யேக நகைத் தொகுப்புகள், சிறப்பு நிகழ்வுகளுக்கான ஆடம்பர நகைகள் மற்றும் பாரம்பரிய வடிவமைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

5 scaled

இதுகுறித்து ஸ்ரவண் குமார் குடூர் கூறியதாவது: இந்திய பாரம்பரியம், சிறந்த கைவினைத் திறன் மற்றும் காலத்தால் அழியாத நேர்த்தியை பிரதிபலிக்கும் வகையில் எங்களின் ஒவ்வொரு நகையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணமகள் நகைகள், கோயில் நகைகள், வைர நகைகள் மற்றும் ஜடாவ் நகைகள் உள்ளிட்ட எங்களின் சிறப்பு தொகுப்புகளை கோவை மக்களிடம் அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம் என்றார்.

7 scaled

தொடக்க நிகழ்வில் ஸ்ரீ விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பத்மினி ராமமூர்த்தி, கௌமாரம் பிரசாந்தி அகாடமியின் நிறுவனர் தீபா மோகன்ராஜ், ஆஷா ராஜ்குமார், பிரிட்ஜ்வுட் குழுமப் பள்ளிகளின் நிறுவனர் வித்யாபிரபா, பிராட்வே மெகாப்ளெக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த சங்கீதா சதீஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்