கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் சிறுநீரகம், புரோஸ்டேட், சிறுநீர்ப்பை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாம் இம்மாதம் இறுதிவரை (ஜூலை 31, 2026) நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர, தினமும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை முகாம் செயல்படும்.

இந்த நாட்களில், நோயாளிகள் அனுபவம் வாய்ந்த சிறுநீரக மருத்துவர்களிடம் கட்டணமில்லாமல் ஆலோசனை பெறலாம். பரிந்துரைக்கப்படும் நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சைகள், தழும்புகள் இல்லாத லேசர் சிகிச்சைகள் மற்றும் எம்போலைசேஷன் சிகிச்சைகள் சலுகைக் கட்டணத்தில் வழங்கப்படும்.

ரோபோடிக் அறுவை சிகிச்சை என்பது ரோபோ இயந்திரத்தால் மட்டும் செய்யப்படுவதல்ல. இது மிகவும் திறமையான மருத்துவர்களால், ரோபோடிக் அமைப்பின் உதவியுடன் துல்லியமாகச் செய்யப்படுகிறது.

இது குறித்து கேஎம்சிஹெச் மருத்துவமனையின் சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குப்புராஜன் கூறுகையில், வாகனங்களில் உள்ள பாதுகாப்பு வசதி போல, இந்த ரோபோடிக் தொழில்நுட்பம் மருத்துவருக்கு உதவியாக இருக்கும். ஆனால், அறுவை சிகிச்சை முழுவதும் மருத்துவரின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று விளக்கினார்.

மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் செய்ய உதவுகிறது. பழைய முறை அறுவை சிகிச்சைகளை விட இதில் வலி மிகவும் குறைவு. துல்லியமாகச் செய்யப்படுவதால், நோயாளிகள் விரைவாகக் குணமடைந்து, தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.

குணப்படுத்தக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோய்க்கு 90 சதவீதத்திற்கு மேல் உலகளவில் இந்த ரோபோடிக் முறையே பின்பற்றப்படுகிறது. சிறுநீரகத்தைப் பாதுகாக்க வேண்டிய அறுவை சிகிச்சைகளுக்கு இது மிகவும் சிறந்தது. சிக்கலான கட்டிகளை அகற்றுவதற்கும், அறுவை சிகிச்சையைச் சிறப்பாகச் செய்வதற்கும் உதவுகிறது. மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகள்: இடுப்புப் பகுதி பிரச்சனைகளைச் சரிசெய்யவும் இது பயன்படுத்தப்படுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு அல்லது ஆலோசனை பெற தொடர்பு கொள்ளவும்: தொலைபேசி: 741 888 7411