கோவை கொடிசியாவில் நடைபெற்ற அக்ரி இன்டெக்ஸ் 2026 விவசாயக் கண்காட்சியில், எக்கி பம்ப்ஸ் குழுமம், அதிக தொழில் நுட்ப திறன் கொண்ட புதிய ஹரி-மேக்ஸ் வகை மல்டி-ஸ்டேஜ் ஹாரிசாண்டல் ஒபன் வெல் பம்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
உயரிய இடுவண் பொருட்களால் உற்பத்தி செய்யும் புதிய ஹரி-மேக்ஸ் வகை மல்டி-ஸ்டேஜ் படுக்கை வடிவ ஒபன் வெல் பம்புகள் 300 அடி ஆழத்திலிருந்து நீரை வெளியேற்றும் ஆற்றல் கொண்டவை. சொட்டு நீர் பாசன வசதிக்கேற்ப அதிக தூரத்திற்கு நீர் இறைக்கும் செயல் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எக்கி பம்ப்ஸ் குழுமம் 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு டெக்கான் மற்றும் எக்கி பிராண்டுகளில் பம்ப்செட்டுகளை ஏற்றுமதி செய்து வருகிறது. எக்கி பம்ப்ஸ் குழுமம் உலகின் முன்னணி கழிவுநீர் பம்ப்செட் உற்பத்தி நிறுவனமான ஜெர்மனியின் ஹோமா நிறுவனத்துடன் சர்வதேச வணிகக் கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
