ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் “அஹம் பிரவாஹினி – நதியின் கவி நார்த்தனம்” என்ற நாட்டிய நிகழ்ச்சி,கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 12 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. பிரபல நாட்டிய கலைஞர் ஷோபனா பாலச்சந்திரா தலைமையில் அவரது குழுவினர் இந்நிகழ்ச்சியை வழங்க உள்ளனர்.

‘அஹம் பிரவாஹினி’ என்ற நாட்டிய நிகழ்ச்சி, மலையில் பிறந்து பல்வேறு நிலப்பரப்புகளைக் கடந்து கடலில் கலக்கும் ஒரு நதியின் பயணத்தையும், அதன் உணர்வுகளையும் நடன வடிவில் சித்தரிக்கிறது. இயற்கை, பண்பாடு, மனித வாழ்வுடன் நதியின் பிணைப்பை அழகாக வெளிப்படுத்தும் இந்நிகழ்ச்சி, நதியின் உள்ளார்ந்த உணர்வுகளையும் கலைநயத்துடன் எடுத்துரைக்கும் ஒரு தனித்துவமான நாட்டியப் படைப்பாகும்
