இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக காகிதப் பை தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை இந்துஸ்தான் கல்வி மற்றும் அறக்கட்டளையின் செயலாளர் சரஸ்வதி, நிர்வாகச் செயலாளர் பிரியா, கல்லூரி முதல்வர் பொன்னுசாமி மற்றும் இந்துஸ்தான் இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் சுஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

01 15 scaled 02 15 scaled

கல்லூரி, பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை தயாரித்து விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். மாணவர்கள் தயாரித்த காகிதப் பைகள் அருகிலுள்ள கடைக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.