டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அலுவலர் வைத்தீஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தீ விபத்துகள் ஏற்படும் காரணங்கள், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள், பல்வேறு வகையான தீகள் மற்றும் அவற்றிற்கு ஏற்ற தீயணைப்பு கருவிகளை சரியான முறையில் பயன்படுத்தும் விதம் குறித்து விளக்கினார்.

தொடர்ந்து, தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்தி தீயை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்த செயல்விளக்கப் பயிற்சியை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சரவணன், மாணவர் நலத்துறை இணை டீன் மோகன்குமார், தேசிய மாணவர் படை கேடட்டுகள் கலந்துகொண்டனர்.